❤ஆண் மற்றும் பெண்ணின் ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து துல்லியமாக கணிக்க முடியாது என்பது உண்மை.
❤ஆனால், துல்லியமான ஜாதக கணிப்பு மற்றும் திருமண பொருத்தம் கணிக்க, ஆண் மற்றும் பெண்ணின் முழுமையான பிறந்த விவரங்கள் தேவைப்படும். அதாவது, அவர்களின் பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் ஆகிய மூன்று விவரங்களும் முக்கியமானவை.
❤இவை நன்கு அறியப்பட்டால், கிரக நிலை, தசா புத்தி, நவாம்சம், மற்றும் பிற பரிகணனைகளை கணித்து துல்லியமான ஜாதக பொருத்தம் செய்யலாம். இது திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை தீர்மானிக்க உதவும்.
❤முழுமையான பிறந்த விவரங்களை கொண்டு செய்யப்படும் கணிப்பு தான் அதிக துல்லியமாக இருக்கும், இது பொதுவான கருது அல்ல அணைத்து ஜோதிடர்களால் நம்பக்கூடிய ஆழமான கருத்தாகும்
❤திருமண பொருத்தம் பார்க்கும் முன், இருவரின் ஜாதக அமைப்பை தெளிவாக அறிந்துகொள்ள Jathagam Kattam in Tamil பார்க்கப்பட வேண்டும். திருமண பொருத்தத்தின் முக்கிய விதிகள்
நட்சத்திர பொருத்தம், என்பது திருமணத்திற்கு தயாராகும் ஆணும் பெண்ணும் வெவேறு குடும்ப சூழ்நிலையில் வளர்த்தவர்கள் அவர்கள் உடலளவிலும், மனதளவிலும், குடும்ப பொருளாதாரத்திலும், குணாதிசயங்களும் ஒன்றிப்போய் விட்டுக்கொடுத்து வாழ்வார்களா என்பதை உறுதி படுத்த ஜோடித்திட சாஸ்திரத்தில் அவர்களின் ஜென்ம நட்சத்திரத்தை ஆராந்து 10 முக்கிய பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன அதுவேய நட்சத்திர பொருத்தம் எனப்படு இதுவே பொருத்தம் பார்ப்பதற்கு முதல் படியாகும் இதை அடிப்படை பொருள் என்னவென்றால் தம்பதியின் மகிழ்ச்சி, அரசாக்கியம் மற்றும் வாரிசு வளர்ச்சியை உறுதி செய்ய பயன்படுகிறது..
செவ்வாய் தோஷம், இணையதளங்களில் பொதுவாக லக்கினத்தில் இருந்து செவ்வாய் 2,4,7,8,12 அகத்திய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொதுவான விவரம். அனால் செவ்வாய் தோஷத்திற்கும் விதி விளக்கு உண்டு செவ்வாய் ஆட்சி பலம் உள்ள இடங்களில் செவ்வாய் தோஷம் இல்லை என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர் இந்த தோஷம் திருமண தடை ஏற்படுத்தக்கூடிய ஒரு தோஷம் எனவேய செவ்வாய் தோஷத்தை விரிவாக ஆராய வேண்டும். செவ்வாய் தோஷத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம் சமநிலை படுத்துதல், தம்பதியினர் இருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் பொருந்தும் அதே போல் தோஷம் இல்லை என்றாலும் பொருந்தும் ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றொருவருக்கு தோஷம் இல்லை என்றல் பொருந்தாது ஏனென்றால் செவ்வாய் ஒரு நெருப்பு கிரகம் இருவரின் குணாதிசயங்களில் மிகப்பெரிய இடைவேளை ஏற்படுத்திவிடும்.குறிப்பாக 8 ஆம் இடத்தில செவ்வாய் இருந்தால் வாழ்கை துணையை பாதிக்கும்.
ராகு கேது தோஷம் ( சர்ப தோஷம் ), நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஒருவரது வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றிய தோஷம். லக்கினத்திலோ அல்லது இரண்டாம் பாவத்திலோ ராகு அல்லது கேது இருந்தால் இந்த தோஷத்தின் பாதிப்பு இருக்கும். இதன் விளைவு குடும்பத்தி தம்பதியினர் நடுவே தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்தி பிரிவினையை உண்டாகும். இந்த தோஷத்தை பார்ப்பதற்கு முக்கிய காரணம் வம்ச விருத்தி மற்றும் மனா குழப்பம். இருவரின் ஜாதகத்தி தோஷம் இருக்கும் நிலையில் ராகு கேது தோஷம் சமப்படுத்துதல், தம்பதியருக்கு மகிழ்ச்சியான வாழ்கை சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.
தசை சாந்தி, தசை என்றல் ஆட்சி சந்தில் என்றல் அந்த தசை முடிவடையும் காலம், ஜோதிடத்தில் பொதுவான வார்த்தை தசை புத்தி அதுவும் வாழ்க்கையின் பலன்களை அறிய தசை புத்தி முகமுக்கியமானவை. இவை ஏன் திருமணத்திற்கு பார்க்கவேண்டும் என்றல், ஒவ்வொரு தசை முடிந்து அடுத்த தசை மாறும் பொழுது அந்த கிரகங்களுக்கான மாற்றங்கள் வந்தடையும் அது வேலை மற்றம், இடம் மற்றம், பொருளாத மற்றம் ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் இந்த மற்றம் மகிழ்ச்சியான மாற்றமானாலும் துயரமான மாற்றமேயென்றாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த மற்றம் தம்பதிக்கு ஒரேய நேரத்தில் நேர்ந்தால் குடும்ப சூழ்நிலையை மாறிவிடும் உதாரணத்திற்கு சந்தோசமாக இருந்தாலும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை இருந்தாலும் ஒரேய நேரத்தில் வந்து போகும் இதனை பார்ப்பதற்குத்தான் தசை சாந்தி உதவுகிறது. இருவருக்கும் 12 முதல் 18 மாதங்களில் தசை மற்றம் இருக்க கூடாது கணவருக்கு மற்றம் வரும்போது மனைவியும் மனைவிக்கு மற்றம் வரும் போது கணவனும் பொருளாதார நெருக்கடி, மன கஷடம் வந்தாலும்,உடல் ஆரோக்கியம் இல்லை என்றாலும் தாங்கி பிடிக்கவேண்டும் இருவருக்கும் சூழ்நிலையை சரி இல்லை என்றல் தாங்கி பிடிக்க ஆள் இல்லாமல் போய்விடும். குடும்ப ஒற்றுமைக்காக பார்க்கப்படும் முக்கிய ஆய்வு,
களத்திர ஸ்தானம், என்பது ஏழாம் பாவமாகும் அதாவது லக்கினம் என்றல் நான் என்பதை குறிக்கும் ஏழாம் பாவம் நாம் என்பதை குறிக்கும், தம்பதியினரின் ஏழாம் பாவத்தின் ஆய்வு ஒரு முக்கியமான குறிப்புகளை கொடுக்கும். ஆணின் 7-ம் இடத்தின் அதிபதி (Lord of 7th House) யார் என்று பார்க்க வேண்டும். பெண்ணின் லக்னமோ அல்லது ராசியோ, ஆணின் 7-ம் இடத்திற்குப் பொருந்தி வருகிறதா என்று பார்ப்பது சிறப்பு.
திருமணத்திற்கு பார்க்கப்படும் 12 பொருத்தங்கள்
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
தினப் பொருத்தம் - ஆரோக்கியமான வாழ்க்கை
தினம் என்றால் நாள்தோறும் என்று பொருள். இந்த நாள் பொருத்தம் இருந்தால், ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது அவர்கள் சண்டையில்லாமல் நோயற்று மகிழ்வுடன் வாழ்வார்கள் என அர்த்தம்.
- நோயற்ற வாழ்வு (Health & Longevity): தினப் பொருத்தம் சிறப்பாக அமைந்தால் மட்டுமே தம்பதிகளுக்கு நீண்ட ஆயுளும், நோயற்ற வாழ்க்கையும் கிடைக்கும். இது சரியில்லை என்றால், அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
- மன நிம்மதி (Mental Peace): "தினமும்" நிம்மதி வேண்டும் அல்லவா? தம்பதிகளுக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள், சின்ன சின்ன சண்டைகள் வராமல் இருக்க இந்த பொருத்தம் அவசியம்.
- அதிர்ஷ்டம் (Luck Factor): சில நட்சத்திரங்கள் இணையும்போது அது "சம்பத்து தாரை" (செல்வம் தரும்), "சேம தாரை" (நலம் தரும்) அல்லது "மித்ர தாரை" (நட்பு) ஆக அமையும். இது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்.
ஒரு பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்திலிருந்து, ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணிக்கையை கணக்கிடும் போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20 அல்லது 24 என்ற எண்களில் ஏதேனும் ஒன்று வந்தால், தினப்பொருத்தம் (dina porutham) உள்ளது என்று பொருளாகும்.
குறிப்பாக, 27 நட்சத்திரங்களில் "வதம்" (Vatham) அல்லது "வைநாசிகம்" (Vainasika) என்று சொல்லக்கூடிய எட்டாவது நட்சத்திரம் வந்தால், அந்தப் பொருத்தம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
கணப்பொருத்தம்
திருமண பொருத்தங்களில் ( Thirumana Porutham ) கணப் பொருத்தம் (Gana Porutham) முக்கியமான ஒன்று ஆகும். ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும், கணப் பொருத்தம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மொத்தம் 27 நட்சத்திரங்கள் தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன; ஒவ்வொன்றிலும் 9 நட்சத்திரங்கள் அடங்குகின்றன.
- தேவ கணம் (Deva Ganam): மென்மையான குணம், பொறுமை, தர்ம சிந்தனை உடையவர்கள். (எ.கா: அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம்...).
- மனுஷ கணம் (Manushya Ganam): சராசரி மனித குணம், இன்ப துன்பங்களை சமமாக பாவிப்பவர்கள். (எ.கா: பரணி, ரோகிணி, திருவாதிரை...).
- ராட்சத கணம் (Rakshasa Ganam): பிடிவாத குணம், நினைத்ததை முடிக்கும் வேகம், அதிகாரம் செலுத்தும் தன்மை உடையவர்கள். (எ.கா: கிருத்திகை, ஆயில்யம், மகம்...).
மற்றும் மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. தேவகணம் மற்றும் மனித கணம் ஆகிய பிரிவுகளில் உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண் மற்றும் பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனலாம்.
ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் அமையாது. ராக்ஷஸ கண நட்சத்திரங்கள், தேவ கணம் மற்றும் மனித கண நட்சத்திரங்களுக்கு பொருந்தாது.
காண பொருத்தம் எதை குறிக்கிறது என்றல் குணங்களும் ஒத்துப் போகுமா, ஒரே கணத்தில் பிறந்தவர்களுக்கு சிந்தனை ஒரே மாதிரியாக இருக்கும். சண்டை வராது என்பதற்காகத்தான். கணப் பொருத்தம் என்பது யார் பெரியவர் என்ற போட்டி வராமல் இருக்கப் பார்க்கப்படுவதாகும். ராட்சத கணம் ஒரு தடையல்ல, அது ஒரு "வீரியமான குணம்" அவ்வளவே. சரியான இணையைத் தேர்ந்தெடுத்தால் ராட்சத கணக்காரர்கள் வாழ்வில் பெரிய வெற்றிகளை அடைவார்கள்.
மகேந்திரப் பொருத்தம் - புத்திர பாக்கியம்
மகேந்திர பொருத்தம் என்றால் , திருமணம் செய்யக்கூடிய தம்பதிகளுக்குள் குழந்தை வரம் எவ்வாறு இருக்கும், அவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்த மகேந்திர பொருத்தம் உதவுகிறது.
- புத்திர பாக்கியம் (Progeny / Childbirth): இதுதான் மிக முக்கியம். இந்தப் பொருத்தம் சிறப்பாக இருந்தால், தம்பதிகளுக்கு நல்ல புத்திசாலித்தனமான, ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
- வம்ச விருத்தி (Lineage Growth): திருமணம் என்பது இருவர் இணைவது மட்டுமல்ல, ஒரு வம்சத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. அந்த வம்சம் தழைத்து ஓங்க (Family Growth) மகேந்திர பொருத்தம் அவசியம்.
- பாதுகாப்பு (Protection): இந்த பொருத்தம் இருந்தால், அந்தப் பெண்ணுக்கும் குழந்தைகளுக்கும் அந்த ஆண் ஒரு சிறந்த பாதுகாப்பாளராக இருப்பார்.
- மகேந்திர பொருத்தம் இல்லாவிட்டாலும், தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலம் (Jupiter Strength) மற்றும் 5-ம் இடம் (புத்திர ஸ்தானம்) வலுவாக இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு.
- ஆனால், இந்த பொருத்தம் இருப்பது "கூடுதல் பலம்" (Bonus Strength) ஆகும்.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்
திருமணத்திற்கு பிறகு, பெண்ணின் ஆயுள் கணவனின் நட்சத்திரம் மூலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராயும் பொருத்தம்.
இதன் பெயரிலேயே அதற்கான அர்த்தம் ஒளிந்திருக்கிறது.
- ஸ்திரீ (Stree) = பெண்.
- தீர்க்கம் (Deergham) = நீண்ட / நீடித்த.
அதாவது ஒரு பெண்ணின் சுமங்கலி வாழ்வை நீண்டகாலம்ங்க அமைவதற்கு இது ஒரு முக்கியமான பொருத்தமாகும். இந்த பொருத்தினால் கணவரின் ஆயுள் நீண்ட காலம் பாதுகாக்க படும்.
ஆணின் நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரத்தை விட்டு வெகு தொலைவில் (13 நட்சத்திரங்களுக்கு மேல்) இருக்கும்போது, இருவரின் கர்ம வினைகளும் மோதிக்கொள்ளாது. இதனால் பெண்ணுக்கு உடல் ஆரோக்கியம் கூடும், ஆயுள் நீடிக்கும்.
- லட்சுமி கடாட்சம் (Wealth & Prosperity): இந்தப் பொருத்தம் இருப்பின், திருமணத்திற்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். இதை "லட்சுமி கடாட்சம்" என்பார்கள்.
- பெண்ணின் மகிழ்ச்சி (Well-being of the Bride):திருமணமாகிச் செல்லும் பெண், புகுந்த வீட்டில் எவ்வித குறையுமின்றி, சுமங்கலியாக, சுபிட்சமாக வாழ்வதற்கு இந்தப் பொருத்தம் வழிவகுக்கும்.
- வாழ்க்கை சீராகச் செல்ல (Smooth Life): ஆணின் நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரத்தை விட வெகு தொலைவில் இருப்பதால், கர்ம வினைகளின் தாக்கம் குறைந்து, வாழ்க்கை மேடு பள்ளங்கள் இல்லாமல் சீராகச் செல்லும் என்று நம்பப்படுகிறது.
யோனிப் பொருத்தம் - தாம்பத்தியம்
தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்குமான மன மற்றும் உடல் ஒற்றுமையை கண்டறிய பார்க்கப்படுகிறது.
கணவன் மனைவி இடையே உள்ள ஈர்ப்பை உறுதி படுத்து முக்கிய பொருத்தம் யோனி பொருத்தம். ஆணின் நட்சத்திர விலங்கும், பெண்ணின் நட்சத்திர விலங்கும் ஒன்றுக்கொன்று பகையில்லாமல், நட்பாக அல்லது இணக்கமாக உள்ளதா என்று பார்ப்பதே யோனி பொருத்தம். யோனி பொருத்தம் முக்கிய காரணம் தாம்பத்திய மகிழ்ச்சி, உடல் ஒத்துமை மற்றும் வம்ச விருத்தி
சில விலங்குகள் இயற்கையிலேயே ஜென்ம பகையாக இருக்கும். இந்த நட்சத்திரங்களை இணைக்கவே கூடாது.
- பாம்பு x கீரி (ரோகிணி/மிருகசீரிடம் x உத்திராடம்)
- யானை x சிங்கம் (பரணி/ரேவதி x அவிட்டம்/சதயம்)
- குதிரை x எருமை (அஸ்வினி/சதயம் x சுவாதி/ஹஸ்தம்)
- எலி x பூனை
- நாய் x மான்
இதுபோன்ற பகை யோனிகளைச் சேர்த்தால், கணவன்-மனைவிக்குள் காரணமே இல்லாமல் சண்டையும், பிரிவும் வர வாய்ப்புள்ளது.
- தாம்பத்திய மகிழ்ச்சி (Sexual Compatibility):தம்பதிகளுக்குள் தாம்பத்திய உறவில் திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்குமா என்பதை இந்தப் பொருத்தம் தீர்மானிக்கிறது. இருவருக்கும் பகையான யோனி (எ.கா: எலி - பூனை) இருந்தால், தாம்பத்தியத்தில் ஈர்ப்பு குறையலாம் அல்லது வெறுப்பு உண்டாகலாம்.
- உடல் ஒத்துழைப்பு: ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் புரிந்துகொண்டு, அனுசரித்துச் செல்லும் பக்குவத்தை இது கொடுக்கும்.
- வம்ச விருத்தி: தாம்பத்தியம் சிறப்பாக இருந்தால்தான் வாரிசு உருவாக்கம் (Childbirth) தடையின்றி நடக்கும். அதற்கு இந்தப் பொருத்தம் அடிப்படை.
இராசிப் பொருத்தம்
கணப்பொருத்தம் இல்லாத பட்சத்தில், இதுவே தீர்வாகும். ஆணும் பெண்ணும் ஒரே ராசியாயினும் அல்லது ஆண் ராசி பெண் ராசிக்கு 6ம் மேற்படினும், உத்தமம். இருவரின் நீண்ட ஆயுளுக்கு உறுதியளிப்பது இதுவாகும்.
திருமணப் பொருத்தத்தில் "ராசி" என்பது இரண்டு உடல்கள் இணைவதையும், "நட்சத்திரம்" என்பது இரண்டு உயிர்கள் இணைவதையும் குறிக்கிறது. வம்ச விருத்தி, குடும்ப ஒற்றுமை தம்பதியரின் வாழ்க்கையில் இந்த இரண்டையும் உறுதி படுத்துகிறது ராசி பொருத்தம்.
ஒருவருக்கொருவர் 6-வது மற்றும் 8-வது ராசியாக அமைந்தால் (உதா: மேஷம் - கன்னி), அவர்கள் எலியும் பூனையும் போல சண்டையிட்டுக் கொள்வார்கள். எனவே, ராசி பொருத்தம் பார்க்கும்போது இந்த 6-8 அமைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்வது மிக மிக அவசியம்.
ராசி அதிபதி பொருத்தம்
இராசி அதிபதி பொருத்தம் அமைந்தால், ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்த பின்னர், அவர்கள் பரஸ்பர நெருக்கத்துடன் அன்பாக வாழ முடியும். அதேபோல, இராசி பொருத்தம் இருந்தால், பெண்ணின் பெற்றோரும் குடும்பத்தினரும், ஆணின் பெற்றோரும் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான போக்கு உருவாகும். அவர்களுக்குள் விட்டுக்கொடுத்தல் மற்றும் அன்பு பிரதானமாக இருக்கும்
ராசி பொருத்தம் குடும்ப வாரிசுக்கானது என்றல் ராசி அதிபதி பொருத்தம் என்பது கணவன் மனைவி இடையிலான ஒற்றுமையான வாழ்கை முறையும் குடும்ப உறவுகளையும் குறிக்கிறது. உதாரணத்திற்கு திருமணம் என்பது இருவர் இணைவு மட்டும் அல்ல, இரு குடும்பம் சேர்வது அதாவது மாமனார், மாமியார் முற்றும் குடும்ப உறவினரிடம் அனுசரித்து செயல்படுவதை தருவது இந்த ராசி அதிபதி பொருத்தம். மனப் பொருத்தம் இதன் முக்கிய அம்சமாகும்
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு "அதிபதி" (கிரகம்) உண்டு.
- மேஷம், விருச்சிகம் - செவ்வாய்
- ரிஷபம், துலாம் - சுக்கிரன்
- மிதுனம், கன்னி - புதன்
- கடகம் - சந்திரன்
- சிம்மம் - சூரியன்
- தனுசு, மீனம் - குரு
- மகரம், கும்பம் - சனி
இருவரின் ராசி அதிபதி நட்பாக உள்ளார்களா அல்லது பகையாக உள்ளார்களா என்பதே இதன் மூல பொருள். மன ஒற்றுமை & நட்பு, தோஷ நிவர்த்தி, குடும்ப உறவு.
வசியப் பொருத்தம்
வசியம் என்ற வார்தைகே நம் அனைவர்க்கும் ஒரு ஈர்ப்பு இருக்கும், சிலர் இந்த வார்த்தையை கேட்டாலே மாந்திரீகம் என்று எண்ணுவார்கள் அனல் இந்த வசிய பொருத்தம் ஒரு ஜோதிட அறிவியல். திருமணத்திற்குப் பிறகு எத்தனையோ தம்பதிகள் சண்டையிட்டாலும், சிறிது நேரத்திலேயே சமாதானமாகி ஒன்று சேர்ந்துவிடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்குள் இருக்கும் "வசிய பொருத்தம்" ஆகும்.
(சில வசிய ராசி ஜோடிகள்):
- மேஷம் - சிம்மம், விருச்சிகம்
- ரிஷபம் - கடகம், துலாம்
- மிதுனம் - கன்னி
- சிம்மம் - துலாம்
- மீனம் - மகரம்
வசிய பொருத்தம் என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்து, இயற்கையாகக் கவரப்படுகிறார்களா மற்றும் கூடிய வாழ்வுக்கு உகந்தவர்களா என்பதை ஆய்வு செய்யும் பொருத்தமாகும். இது உள்ள தம்பதிகள் ஒருவரை ஒருவர் கவர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாக அன்புடன் இணைந்து வாழ்க்கையை நடத்துவார்கள்
- பிரியாத பந்தம் (Inseparable Bond): கணவன்-மனைவிக்குள் எப்பேர்ப்பட்ட சண்டை வந்தாலும், அது விவாகரத்து வரை செல்லாது. இந்த வசிய சக்தி அவர்களை மீண்டும் சேர்த்து வைத்துவிடும்.
- பரஸ்பர ஈர்ப்பு (Mutual Attraction): வயது முதிர்ந்த காலத்திலும் கூட, தம்பதிகளுக்குள் அன்பு குறையாமல், ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையை இது கொடுக்கும்.
- விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை: தன்னுடைய துணையின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல், அவருக்காக விட்டுக்கொடுத்துப் போகும் குணம் (Compromise) இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.
ரஜ்ஜுப் பொருத்தம் - மாங்கல்ய பாக்கியம்
ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் அந்தத் திருமணத்தை பெரியவர்கள் நடத்த மாட்டார்கள். அந்த அளவுக்கு இது "உயிர்நாடி" (Life Line) போன்றது.
திருமண பொருத்தங்களில் முக்கியமான ஒன்று ரஜ்ஜு பொருத்தம். அதாவது, 10-ல் 9 பொருத்தங்கள் இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில், அந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.
மனித உடலின் ஐந்து முக்கிய அங்கங்களை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
- சிரசு ரஜ்ஜு (Head) - தலை
- கண்ட ரஜ்ஜு (Neck) - கழுத்து
- உதர ரஜ்ஜு (Stomach) - வயிறு
- ஊரு ரஜ்ஜு (Thigh) - தொடை
- பாத ரஜ்ஜு (Foot) – பாதம்
ஒரே ரஜ்ஜுவில் நட்சத்திரங்கள் அமைந்தால் ஏற்படும் தோஷங்கள்:
- சிரசு ரஜ்ஜு (தலை): கணவனின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம் (மிகவும் ஆபத்தானது).
- கண்ட ரஜ்ஜு (கழுத்து): மனைவியின் உயிருக்கு கண்டத்தை ஏற்படுத்தலாம் (பெண்கள் தாலி அணியும் இடம் கழுத்து என்பதால்).
- உதர ரஜ்ஜு (வயிறு): "வயிறு" என்பது குழந்தையைக் குறிக்கும். எனவே புத்திர பாக்கியம் பாதிக்கப்படும்.
- ஊரு ரஜ்ஜு (தொடை): பெரும் தன நஷ்டம் மற்றும் சொத்து இழப்பு ஏற்படும்.
- பாத ரஜ்ஜு (பாதம்): தேவையற்ற அலைச்சல், பிரிவினை மற்றும் வெளியூர் வாழ்க்கை அமையும்.
மணமக்களாக இருக்கப் போகும் ஜோடிக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்று கண்டுபிடிக்கப்படும் போது, அது அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த ஆபத்தைத் தவிர்க்க, ரஜ்ஜு பொருத்தம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
நாடிப் பொருத்தம்
வட இந்தியாவில் (North India) திருமணப் பொருத்தத்தில் இதற்குதான் அதிகப்படியான மதிப்பெண்கள் (8 புள்ளிகள்) கொடுப்பார்கள். தென்னிந்தியாவிலும் இதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பொருத்தத்தை மரபணு பொருத்தம் என்று கூறுவார்கள்
கணவன் மற்றும் மனைவி தங்களின் குடும்ப வாழ்க்கையை நலமாக நடத்த, இந்த உடல் நிலை பரிசோதனை அவசியமாக அமைகிறது.
ஜோதிடத்தில் "ரஜ்ஜு" எப்படி மாங்கல்ய பலத்தை சொல்கிறதோ, அதேபோல "நாடி" என்பது உடல் ஆரோக்கியத்தையும், வாரிசுகளின் ஆரோக்கியத்தையும் கணிக்கிறது.
மனித உடலில் ஓடும் நாடி நரம்புகளின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நட்சத்திரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- ஆதி நாடி (வாதம்): காற்றின் தன்மை கொண்டது.
- மத்திய நாடி (பித்தம்): நெருப்பின் தன்மை கொண்டது.
- அந்திய நாடி (கபம்): நீரின் தன்மை கொண்டது.
குழந்தை பாக்கியம்: ஒரே நாடி உள்ளவர்கள் திருமணம் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு அல்லது மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜோதிடம் எச்சரிக்கிறது.
உடல் ஆரோக்கியம்: ஒரே நாடி இணையும்போது (குறிப்பாக மத்திய நாடி), தம்பதிகளுக்குள் அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் வரலாம்.
இருவருக்கும் ஒரே நாடி அமைந்தால் ஏற்படும் பாதிப்புகள்:
- ஆதி நாடி + ஆதி நாடி: கணவனுக்கு கண்டம் அல்லது குழந்தைகளைப் பாதிக்கும்.
- மத்திய நாடி + மத்திய நாடி: இது மிக மோசமானது. இருவரின் உயிருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம்.
- அந்திய நாடி + அந்திய நாடி: மனைவிக்கு உடல்நலப் பாதிப்பைத் தரும்.
வேதைப் பொருத்தம்
திருமணப் பொருத்தத்தின் இறுதிப் பொருத்தம் வேதைப் பொருத்தம். ஆனால், "கடைசியாக இருக்கிறதே என்று அலட்சியப்படுத்தக் கூடாத" மிக முக்கியமான பொருத்தம் இது. மற்ற 9 பொருத்தங்கள் அமோகமாக இருந்தாலும், வேதை இருந்தால் வாழ்க்கை கசந்துவிடும்.
வேதைப் பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தமாக கருதப்படுகிறது. மேலும், இரட்சிப் பொருத்தமானது மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகப்படி பொருந்தினால் மனவாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் அதனுடன் வேதைப் பொருத்தமும் சேர்ந்து அமைந்தால், மனவாழ்க்கை ஆனந்தமாக அமையும்.
இந்த ஜோடிகளைத் தவறுதலாகக் கூட சேர்த்துவிடக் கூடாது. சில முக்கிய உதாரணங்கள்:
- அசுவினி ❌ கேட்டை (ஆகவே ஆகாது).
- பரணி ❌ அனுஷம்
- கார்த்திகை ❌ விசாகம்
- ரோகிணி ❌ சுவாதி
- திருவாதிரை ❌ திருவோணம்
- புனர்பூசம் ❌ உத்திராடம்
- பூசம் ❌ பூராடம்
- ஆயில்யம் ❌ மூலம்
- நிம்மதியின்மை: கணவன்-மனைவிக்குள் காரணமே இல்லாமல் சதா சர்வகாலமும் சண்டை இருக்கும். "எலியும் பூனையும்" போல இருப்பார்கள்.
- முன்னேற்றத் தடை: குடும்பத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்காது. ஏதேனும் ஒரு தடை (Obstacle) வந்துகொண்டே இருக்கும்.
- மன உளைச்சல்: சேர்ந்து வாழவும் முடியாமல், பிரிந்து செல்லவும் முடியாமல் தம்பதிகள் மனக்கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.
வேதை பொருத்தம் இல்லாவிட்டாலும், ரஜ்ஜீ பொருத்தம் இருந்தால் கூட திருமணம் செய்ய முடியும்.
ரஜ்ஜு இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து (Life Risk).
வேதை இல்லையென்றால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது (Peace of Mind Risk).
ரஜ்ஜு "கொன்றுவிடும்", வேதை "வாழவும் விடாது, சாகவும் விடாது" என்று கிராமங்களில் சொல்வார்கள்.
விருட்சப் பொருத்தம்
விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண் இருவரில் ஒருவருக்கு பால் மரம் இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு. இது ஒரு முக்கியமான பொருத்தம் இல்லை .
ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் திசையில் சூரியன் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை ஜாதகரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் நடுவது சிறப்பு.
- விதி: மணமகன் அல்லது மணமகள் இருவரில் யாருக்காவது ஒருவருக்காவது "பால் உள்ள மரம்" நட்சத்திரமாக அமைந்தால் அது மிகவும் விசேஷம்.
- பலன்: பால் உள்ள மரங்கள் எப்படி செழிப்பாக வளர்ந்து பிசின் (Milk/Sap) தருகிறதோ, அதேபோல அந்தத் தம்பதிகளின் சந்ததி (வம்சம்) செழிப்பாக வளரும். குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும்.
- அசுவினி - எட்டி மரம்
- பரணி - நெல்லி மரம்
- கார்த்திகை - அத்தி மரம் (பால் மரம் - சிறப்பு)
- ரோகிணி - நாவல் மரம்
- பூசம் - அரச மரம் (பால் மரம் - மிகச் சிறப்பு)
- மகம் - ஆலமரம் (பால் மரம் - மிகச் சிறப்பு)