Marriage Porutham - திருமண பொருத்தம்

tamil marriage matching

marriage matching in Tamil
மணமகன்

    jathaga porutham tamil
    மணமகள்

      love-matchஆண் மற்றும் பெண்ணின் ராசி மற்றும் நட்சத்திரத்தை வைத்து துல்லியமாக கணிக்க முடியாது என்பது உண்மை.

      love-matchஆனால், துல்லியமான ஜாதக கணிப்பு மற்றும் திருமண பொருத்தம் கணிக்க, ஆண் மற்றும் பெண்ணின் முழுமையான பிறந்த விவரங்கள் தேவைப்படும். அதாவது, அவர்களின் பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் ஆகிய மூன்று விவரங்களும் முக்கியமானவை.

      love-matchஇவை நன்கு அறியப்பட்டால், கிரக நிலை, தசா புத்தி, நவாம்சம், மற்றும் பிற பரிகணனைகளை கணித்து துல்லியமான ஜாதக பொருத்தம் செய்யலாம். இது விவாகத்திற்குப் பிந்தைய வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை தீர்மானிக்க உதவும்.

      love-matchமுழுமையான பிறந்த விவரங்களை கொண்டு செய்யப்படும் கணிப்பு தான் அதிக துல்லியமாக இருக்கும்.

      Sevvai Dosham

      திருமணத்திற்கு பார்க்கப்படும் 12 பொருத்தங்கள்

      dina-porutham

      தினப் பொருத்தம்

      தினம் என்றால் நாள்தோறும் என்று பொருள். இந்த நாள் பொருத்தம் இருந்தால், ஆணும் பெண்ணும் கூடி வாழும் பொழுது அவர்கள் சண்டையில்லாமல் மகிழ்வுடன் வாழ்வார்கள் என அர்த்தம்.

      ஒரு பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்திலிருந்து, ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணிக்கையை கணக்கிடும் போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20 அல்லது 24 என்ற எண்களில் ஏதேனும் ஒன்று வந்தால், தினப்பொருத்தம் (dina porutham) உள்ளது என்று பொருளாகும்.

      கணப்பொருத்தம்

      கணப் பொருத்தம் (Gana porutham) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது, ஆனால் ரஜ்ஜு பொருத்தம் இருந்தாலும். மொத்தம் 27 நட்சத்திரங்களில், தலா 9 நட்சத்திரங்கள் தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று வகைகளை கொண்டுள்ளது.

      மற்றும் மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு. தேவகணம் மற்றும் மனித கணம் ஆகிய பிரிவுகளில் உள்ள நட்சத்திரங்கள் கொண்ட ஆண் மற்றும் பெண் ஜாதகங்களுக்கும் கணப்பொருத்தம் உண்டு எனலாம்.

      ஆண், பெண் இருவரின் நட்சத்திரங்களும் அசுர கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் அமையாது. ராக்ஷஸ கண நட்சத்திரங்கள், தேவ கணம் மற்றும் மனித கண நட்சத்திரங்களுக்கு பொருந்தாது

      gana-porutham

      மகேந்திரப் பொருத்தம்

      மகேந்திர பொருத்தம் என்றால், திருமணம் செய்யக்கூடிய தம்பதிகளுக்குள் குழந்தை பாக்கியம் எவ்வாறு இருக்கும், அவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு இந்த மகேந்திர பொருத்தம் உதவுகிறது.

      ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

      திருமணத்திற்கு பிறகு, பெண்ணின் ஆயுள் கணவனின் நட்சத்திரம் மூலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை ஆராயும் பொருத்தம்.

      யோனிப் பொருத்தம்

      தாம்பத்திய உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்குமான மன மற்றும் உடல் ஒற்றுமையை கண்டறிய பார்க்கப்படுகிறது.

      இராசிப் பொருத்தம்

      கணப்பொருத்தம் இல்லாத பட்சத்தில், இதுவே தீர்வாகும். ஆணும் பெண்ணும் ஒரே ராசியாயினும் அல்லது ஆண் ராசி பெண் ராசிக்கு 6ம் மேற்படினும், உத்தமம். இருவரின் நீண்ட ஆயுளுக்கு உறுதியளிப்பது இதுவாகும்.

      yogini-porutham

      ராசி அதிபதி பொருத்தம்

      இராசி அதிபதி பொருத்தம் அமைந்தால், ஆணும் பெண்ணும் ஒன்றிணைந்த பின்னர், அவர்கள் பரஸ்பர நெருக்கத்துடன் அன்பாக வாழ முடியும். அதேபோல, இராசி பொருத்தம் இருந்தால், பெண்ணின் பெற்றோரும் குடும்பத்தினரும், ஆணின் பெற்றோரும் குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்வதற்கான போக்கு உருவாகும். அவர்களுக்குள் விட்டுக்கொடுத்தல் மற்றும் அன்பு பிரதானமாக இருக்கும்

      Sevvai Dosham

      வசியப் பொருத்தம்

      வசிய பொருத்தம் என்பது ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்து, இயற்கையாகக் கவரப்படுகிறார்களா மற்றும் கூடிய வாழ்வுக்கு உகந்தவர்களா என்பதை ஆய்வு செய்யும் பொருத்தமாகும். இது உள்ள தம்பதிகள் ஒருவரை ஒருவர் கவர்ந்துகொண்டு, மகிழ்ச்சியாக அன்புடன் இணைந்து வாழ்க்கையை நடத்துவார்கள்

      ரஜ்ஜுப் பொருத்தம்

      திருமணத்திற்கு பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில் முக்கியமானது ரஜ்ஜு பொருத்தம். அதாவது, 10-ல் 9 பொருத்தங்கள் இருந்தாலும், ரஜ்ஜு பொருத்தம் இல்லையெனில், அந்த மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்க கூடாது.

      மணமக்களாக இருக்கப் போகும் ஜோடிக்கு ரஜ்ஜு தட்டுகிறது என்று கண்டுபிடிக்கப்படும் போது, அது அவர்களுக்குக் கெடுதல் விளைவிக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, இந்த ஆபத்தைத் தவிர்க்க, ரஜ்ஜு பொருத்தம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.

      rajju-porutham
      nadi-porutham

      நாடிப் பொருத்தம்

      கணவன் மற்றும் மனைவி தங்களின் குடும்ப வாழ்க்கையை நலமாக நடத்த, இந்த உடல் நிலை பரிசோதனை அவசியமாக அமைகிறது.

      வேதைப் பொருத்தம்

      வேதைப் பொருத்தம் என்பது திருமண பொருத்தத்தில் பார்க்கப்படும் முக்கியமான பொருத்தமாக கருதப்படுகிறது. மேலும், இரட்சிப் பொருத்தமானது மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகப்படி பொருந்தினால் மனவாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் அதனுடன் வேதைப் பொருத்தமும் சேர்ந்து அமைந்தால், மனவாழ்க்கை ஆனந்தமாக அமையும்.

      வேதை பொருத்தம் இல்லாவிட்டாலும், ரஜ்ஜீ பொருத்தம் இருந்தால் கூட திருமணம் செய்ய முடியும்.

      விருட்சப் பொருத்தம்

      விருட்சம் என்றால் மரம் என்று அர்த்தம். 27 நட்சத்திரங்களும் பால் உள்ள மரம் மற்றும் பாலற்ற மரம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருத்தம் புத்திர பாக்கியம் அடைய பார்க்கப்படுகிறது. ஆண் மற்றும் பெண் இருவரில் ஒருவருக்கு பால் மரம் இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு. இது ஒரு முக்கியமான பொருத்தம் இல்லை .

      ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் திசையில் சூரியன் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை ஜாதகரின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் நடுவது சிறப்பு.

      Marriage-Porutham