June 27, 2025
ஆணின் திருமண காலத்தில், நடக்கும் தசாநாதன் ஜெனன காலத்தில் எந்த நட்சத்திரத்தில் இருந்தாரோ, அந்த நட்சத்திரத்தின் அதிபதி, பெண்ணின் லக்கினத்திற்க்கு 1,3,5,7,9,11-ஆம் வீட்டின் அதி பதியாக இருந்தால் பொருத்தம் உண்டு. 6,8,12-ஆம் வீட்டின் அதி பதியாக இருந்தால் பொருத்தம் இல்லை.
பெண்ணின் திருமண காலத்தில் நடக்கும் தசாநாதன், ஜெனன காலத்தில் எந்த நட்சத்திரத்தில் இருந்தாரோ, அந்த நட்சத்திரத்தின் அதிபதி, ஆணின் லக்கினத்திற்க்கு 1,3,5,7,9,11 -ஆம் வீட்டின் அதிபதியாக இருந்தால் பொருத்தம் உண்டு. 6,8,12-ஆம் வீட்டின் அதிபதியாக இருந்தால் பொருத்தம் இல்லை.
ஆண், பெண் இருவருக்கும் திருமண காலத்தில் நடக்கும் திசாநாதன் எதிர்பாலரின் லக்கினத்திற்கு 1,3,5,7,9,11 -ஆம் வீட்டின் அதிபதியாக இருந்தாலும் பொருத்தம் உண்டு. மாறாக 6,8,12-ஆம் அதிபதியானால் பொருத்தம் இல்லை.2,4,10-ஆம் அதிபதியானால் மத்திமமான பொருத்தம் உண்டு.
எந்த ஜாதகமாக இருந்தாலும், பிறக்கும்போது நடப்பு தசாநாதன் 4,7,9,11 உடன் தொடர்பு கொண்டு 5 வருடத்திற்குள் நடக்குமாயின் அந்த குழந்தைக்கு வேண்டிய அனைத்து வசதிகளை பெற்று நல்ல முறையில் வாழ்ந்து வந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
நடப்பு தசாநாதன் 1,9,11 உடன் தொண்டு திசை நடந்து இருக்குமாயின் நன்றாக படித்து ஒரு டிகிரி பெற்றிருப்பார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
நடப்பு தசாநாதன், 1,3,5,7,11-ன் தொடர் பெற்று இருந்தால், திருமணம் நல்ல முறையில் நடந்து, குழந்தை பிறந்து வாழ்ந்திருப்பார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
நடப்பு தசாநாதன் 2,4,10-ன் தொடர்பெற்றிருந்தால் பொன், பொருள், சொத்து சேர்க்கை ஏற்பட்டு வாழ்ந்திருப்பார் என்று அறிந்து கொள்ளலாம்.
2,4,10,1,7,5 இவைகள் கலந்து இருந்தால் சொத்து, தொழில், மனைவி மக்களுடன் சிறப்பாக வாழ்ந்து வந்துள்ளார் என அறிந்து கொள்ளலாம்.
1,5,9 உடன் தொடர்பு பெற்றிருந் தால் குழந்தைகள், பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார் என அறிந்து கொள்ளலாம்.
5,7,11,1 உடன் தொடர் பெற்றிருந்தால் ஜாதகர் சொந்த இருப்பிடத்தில் மற்றவர் துணையுடன், சுகமாக வாழ்வார் என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கூறிய விதிகள் ஆண், பெண் ஜாதகத்தில் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை அறிந்து பொருத்தம் நிர்ணயம் செய்யலாம்.
ஆணிண் லக்கன சப்லார்டும், அவர் நின்ற ஸ்டார், ப்-உம் பெண்ணின் 7,11-ஆம் சப்லார்டு ஆக வந்தால் கணவனாகி சந்தோஷப்படுத்துவார்.
பெண்ணின் லக்கன சப்லார்டும், அவர் நின்ற ஸ்டார்-சப்-உம் ஆணின் 7-11-ன் சப்லார்டு ஆக வந்தால் மனைவி யாகி சந்தோஷப்படுத்துவார்.
7,11-ஆம் சப்லார்டு ஆக வரவில்லையெனில், அடுத்த தாக 3,5,9-ன் சப்லார்டு ஆக வந்தாலும் பொருத்தம் உண்டு.
பிரசன்ன ஜாதகத்தில் லக்கன சப்லார்டு 7-ஐ காட்ட வேண்டும். 7-ம் பாவ சப்லார்டு நின்ற ஸ்டார் சப் 6,12 -ஐ காட்டக் கூடாது. நடப்பு திசா, புத்தி 6,12-ஐ காட்டக் கூடாது. இவ்வாறு அமைந்தால் திருமணம் விரைவில் நடக்கும். அமையாவிட்டால் சில காலம் கழித்து திருமணம் நடக்கும்.