Read Our Blogs

வீட்டதிபதியை கொண்டு 12 வித பொருத்தம் பார்க்கும் முறை

June 23, 2025

marriage matching tamil

1. தினப் பொருத்தம்

ஆணின் 1-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம், பெண்ணின் லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்திற்க்கு 2,4,6,8,9,11,13,15, 17,18,20,22, 26, 27ஆகிய நட்சத்திரங்களாக வந்தால் தினப் பொருத்தம் உண்டு.

2. கணப்பொருத்தம்

ஆணின் 3-ம் வீட்டதிபதி நின்ற நட்சத் திரமும், பெண்ணின் 3-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரமும் ஒரே கணமானால் உத்தமம். அல்லது தேவம் + மனுச கணம் இருந்தாலும் உத்தமம். ஆண் ராஸச கணமும், பெண் மனுச கணமும் உத்தமம். பெண் ராஸச கணமும் ஆண் தேவ கணமும் / மனுச கணமும் இருந்தால் பொருந்தாது.

Marriage Porutham - திருமண பொருத்தம்

tamil marriage matching

marriage matching in Tamil
மணமகன்

    jathaga porutham tamil
    மணமகள்

      3. மகேந்திர பொருத்தம்

      ஆணின் 5-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரம், பெண்ணின் 5-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரம் முதல் 1,4,7,10,16,18,19,22,25 ஆனால் உத்தமம் புத்திரவிருத்தி.

      4. ஸ்திரி தீர்க்க பொருத்தம்

      4. ஆணின் 7-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரமும், பெண்ணின் 7-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரமும் ஒன்றிலிருந்து மற்றொன்று 13 நட்சத்திரத்திற்கு மேலே வந்தால். சகல சம்பத்து, ஐஸ்வரியம் கொடுக்கும். ஸ்திரி தீர்க்க பொருத்தம். மேலும் 7- நட்சத்திரத்திற்கு மேல் குறைவான சம்பத்து கொடுக்கும். இரண்டு விதிக்கும் குறைவான நட்சத்திரத்தில் அமைந்தால் சம்பத்தை குறைத்து விடும்.

      5. யோனி பொருத்தம்

      ஆணின் 8- வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம், பெண்ணின் 8-வீட்டின் அதிபதி நின்ற நட்சத் திரமும் என்ன மிருகம், பகை யோனி கூடாது. நட்பு யோனி சேர்க்கலாம். பெண்ணுக்கு பெண் யோனி, ஆணுக்கு ஆண் யோனி இருந்தாலும் சேர்க்கலாம். உதாரணம்: 8-ம் வீட்டின் அதிபதி நின்றது, அசுவனி நட்சத்திரம். ஆண் குதிரை, பெண்ணின் 8-வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம் உத்திராடம் -மாபசு இப்பொழுது யோனி பசுவிற்க்கும், குதிரைக்கும் பகைமை ஆகவே யோனி பொருத்தம் இல்லை.

      6. ராசி பொருத்தம்

      ஆணின் 5-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம். பெண்ணின் 5-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம். இந்த நட்சத்திர அதிபதிகளின் வீடுகள் 9- வீடு களுக்கு மேல் இருந்தால் ஆண் சந்தான விருத்தியுண்டு.

      7. ராசி அதிபதி பொருத்தம்

      ஆணின் 1-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரம் பெண்ணின் 1-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும் எந்த வீட்டின் அதிபதி. அந்த வீட்டதிபதிகள், நட்பு, சமம், உச்சம் ஆக இருந்தால் சம்பந்திகள் ஒற்றுமையாய் பொருத்தம் உண்டு. நீசம், பகையானால் ஒற்றுமை குறைவு.

      8. வசிய பொருத்தம்

      ஆணின் 5-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும், பெண்ணின் 5-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும், ஒருவருக்கு மேஷமாகவும், ஒருவருக்கு சிம்மம் ஆகவும் இருந்தால் வசியம் உண்டு. இவ்வாறு மற்ற வசியத்தை பார்த்து கொள்ளவும்.

      9. ரச்சு பொருத்தம்

      பொருந்தல் பெண்ணின் 2-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும், ஆணின் 2-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்த் திரமும் எந்த ரச்சு, அத்தரச்சு இருவருக்கும் பொருத்தம் இருந்தால் உண்டு, இல்லையேல் பொருத்தம் இல்லை.

      10. நாடி பொருத்தம்

      ஆணின் 8-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும். பெண்ணில் 8-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும், எந்த நாடி என்று பார்த்துக் கொள்ளவும். ஒரே மத்திய நாடி வந்தால் பொருத்தம் இல்லை. நாடிகள் தனி, தனியாக வரின் பொருத்தம் உண்டு.

      11. வேதை பொருத்தம்

      ஆணின் 9-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரமும், பெண்ணின் 9-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத் திரமும், ஒருவருக்கொரவர் வேதையாக அமைந்தால் பொருந் தாது. உதாரணம்: ஆணின் 9-ம் வீட்டதிபதி நின்ற நட்சத் திரம், அகவதி, பெண்ணின் 9-ம் வீட்டதிபதி நின்ற நட்சத் திரம் கேட்டை அசுவனி, கேட்டை ஒன்றுக்கொன்று வேதை ஆகவே பொருந்தாது. இவ்வாறே மற்றவற்றையும் பார்க்க.

      12. பட்சி பொருத்தம்

      ஆணின் 1-ம் வீட்டதிபதி நின்ற நட்சத் திரத்தின் அதிபதி, பெண்ணின் 1-ம் வீட்டின் அதிபதி நின்ற நட்சத்திரத்தின் அதிபதி, இது பட்சியை குறிக்கும். உதாரணம்: ஆணின் 1-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரம் அசுவனி, பெண்ணின் 1-ம் வீட்டதிபதி நின்ற நட்சத்திரம் திருவாதிரை, அசுவனி - வல்லூரு, திருவாதிரை - ஆந்தை இவைகளை குறிக்கும். வல்லூரு, ஆந்தைக்கும் பட்சி பொருத்தம் உண்டு. இதற்கு பகையான பட்சி காகம், மயில், கோழி இவைகள் பொருந்தாது. காகம், மயில், கோழி ஒன்றுக்கு ஒன்று பொருந்தும்