July 23, 2025
திருமணப் பொருத்தம் என்பது இந்தியாவில் திருமணத்திற்கு முன்பு மணப்பெண் மற்றும் மணமகன் இவர்களின் பிறந்த கால ஜாதகத்தை கொண்டு இவர்கள் இருவருக்கும் திருமண வாழ்வு எவ்வாறு சிறப்பாக அமையும் என்பதை அறிந்து கொள்வதற்காக பார்க்கப்படும் ஒரு ஜாதக ஒப்பீடு.
இந்தத் திருமண பொருத்தத்தில் ஆய்வை முறையாக ஜோதிடம் பயின்ற ஜோதிடர்களால் மட்டுமே ஒப்பீடு செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பல்வேறு மாதிரியான ஜாதக ஒப்பீடு செய்ய முடியும் இந்த ஒப்பீட்டை முழுமையாக அனைத்து பொருத்தங்கள் மற்றும் தோஷங்கள் கொண்டு ஜோதிடர்கள் முடிவு செய்கின்றனர். திருமணப் பொருத்தம் என்பதை பொதுவாக அனைவரும் நட்சத்திரம் பொருத்தம் இருந்தால் மட்டும் போதும் என்பதை கொண்டு முடிவு செய்கின்றனர்.
ஆனால் ஜோதிடர்களிடையே இன்னும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்தக் கட்டுரை மூலமாக நாங்கள் உங்களுக்கு திருமண பொருத்தம் பார்த்தல் எவ்வாறு முறைப்படி பார்க்கப்படுகிறது என்பதை எங்கள் ஜோதிடரின் அறிவுரையோடு தெளிவாக விளக்கப் போகிறோம்.
பொருத்தத்திற்கு முதலில் ஆண் மற்றும் பெண் இருவரது சரியான ஜாதகம் வேண்டும், உங்களுக்கு சரியான ஜாதகம் இல்லை என்றாலும் உறுதியாக ஜாதகம் தெரியாது என்றாலும் எங்களது இணையதளத்தின் மூலமாக உங்கள் ஜாதகத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் ஜாதகத்தை துல்லியமாக உருவாக்க எங்களுக்கு உங்களது பெயர், பிறந்த ஊர், பிறந்த தேதி பிறந்த நேரம், இருந்தால் மட்டும் போதும்.
திருமண பொருத்தம் பார்க்க பல்வேறு முறைகள் இருந்த போதிலும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது நான்கு விதிகளை மட்டுமே.
திருமண பொருத்தத்தில் மிக முக்கியமானது இந்த நட்சத்திர பொருத்தம். 12 வகையான நட்சத்திர பொருத்தங்கள் நாம் அறிந்ததே இந்த 12 வகை பொருத்தத்தில் ரஜ் பொருத்தம் என்பது மிக முக்கியமானதாகும். திரட்ஜ் பொருத்தம் இல்லை என்றால் நீங்கள் அந்த ஜாதகத்தை மேற்கொண்டு பொருத்திப் பார்ப்பது சரியல்ல வெஜ் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
இரண்டாவதாக யோனி பொருத்தம் இந்த பொருத்தம் இல்லை என்றாலும் நீங்கள் அந்த ஜாதகத்தை பொருத்தி பார்ப்பதை தவிர்ப்பது மிக நல்லது ஏனென்றால் திருமணத்திற்கு தேவைப்படும் இரண்டு முக்கியமான பொருத்தங்கள் இவைகள் ஆகும்.
மூன்றாவதாக மகேந்திர பொருத்தம்என்றால் குழந்தை பாக்கியம் என்பதை குறிக்கும் சிலர் இந்த பொருத்தம் இல்லை என்றால் தவிர்த்து விட எண்ணுவார்கள் ஆனால் இந்த பொருத்தம் இல்லை என்றாலும் ஜாதகத்தை ஐந்தாம் பாவத்தையும் ஏழாம் பாவத்தையும் அவர்களது தசா புத்தியும் கொண்டு சரியாக கனித்தாள் மகேந்திர பொருத்தம் இல்லை என்றாலும் குழந்தை பாக்கியம் தரும் கிரகங்கள் சிறப்பாக இருந்தால் இந்த விதிமுறையை தவிர்த்துக் கொள்ளலாம்.
மணமக்கள் இருவருக்கும் திருமண பொருத்தத்தின் போது நட்சத்திர பொருத்தம் சரியாக அமைந்தால் நீங்கள் அடுத்தது பார்க்க வேண்டியது செவ்வாய் தோஷ பொருத்தம். செவ்வாய் என்பது அங்காரன் என்பது ஜோதிடத்தில் பொருள் பொதுவாக செவ்வாய் தோஷம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் இருவருக்கும் இருந்தால் மட்டுமே பொருத்திப் பார்ப்பார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்கு பல கருவிகள் உள்ளன இருப்பினும் உங்கள் ஜோதிடரின் அறிவுரையை கேட்டுக் கொள்வது மிக முக்கியமாக.
செவ்வாய் தோஷம் பார்க்க பொதுவான கருத்துக்கள் பல உண்டு. இருப்பினும் தோஷ நிவர்த்தி ஆட்சி பெற்ற வீடு போன்ற பல விதிமுறைகள் உண்டு எனில் உங்கள் ஜோதிடரிடம் உறுதி பெற்றுக் கொண்டு உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை முடிவு செய்து கொண்டு திருமண பொருத்தத்தில் பயன்பெறவும்.
ஜாதகத்தில் தோஷங்கள் பல உண்டு இதில் செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் மிக முக்கியமானதாகும். ராகு கேது தோஷம் பார்ப்பது திருமணத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். ராகு கேது ஜாதகத்தை அறிய மிக சுலபமான வழி என்னவென்றால் உங்கள் ஜாதகமான லக்னத்தில் ராகுவோ கேதுவோ அல்லது உங்கள் இரண்டாம் பாவத்தில் ராகுவோ கேதுவோ அமைந்திருந்தால் உங்கள் ஜாதகம் ராகு கேது ஜாதகம் எனப்படும்.
ராகு கேது ஜாதகத்திற்கு எந்த சிறப்பான விதிமுறைகளும் கிடையாது இந்த ஒரு வழிமுறைதான் பொதுவாக அனைவரும் ராகு கேது பார்ப்பது இல்லை நமது முன்னோர் காலங்களில் ராகு கேது தோஷம் என்பது வரையறை படுத்தப்படவில்லை நமது நவீன காலத்தில் நமது கணித முறையை உட்கொண்டு ராகு கேது தோஷங்களை பார்த்து வருகின்றனர் ஜாதக பொருத்தத்தின் போது உங்களுக்கு ராகு திசையோ கேது திசையோ நடந்து கொண்டிருந்தால் நீங்கள் ராகு கேது ஜாதகம் இல்லை என்றாலும் ராகு கேது ஜாதி பொருத்திப் பார்க்க முடியும் என்பது ஜோதிடரின் பொதுவான கருத்து.
தசா சந்திப்பு என்பது ஆணின் நடப்பு தசையும் பெண்ணின் நடப்பு தசையும் வைத்து ஒப்பீடு செய்து பார்ப்பது தசா சந்தி பொருத்தம் எனப்படும். பொதுவாக ஆணிற்கும் பெண்ணிற்கும் ஒரே தசை இருக்கக் கூடாது என்பதும் அதேபோல் முன்னும் பின்னும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் இருவருக்கும் ஒரே தசை இருக்கக் கூடாது என்பதை பார்ப்பது தசா சந்தி எனப்படும்.
ஒவ்வொரு முறையும் இதை பார்க்கப்படுவதற்கான காரணம் என்னவென்றால் சில நேரம் இருவருக்கும் ஒரே திசை நடைபெறும் பொழுது நல்ல கிரக தசை என்றால் நல்லது நடக்கும் என்பதும் தீய கிரகங்களும் திசை என்றால் மன வருத்தம் இருக்கும் என்பதும் பொருள் ஆகும். நல்லது மற்றும் தீயது இவை இரண்டும் ஒரே நேரத்தில் இருவருக்கும் நேரக்கூடாது என்பது இந்த ஆய்வின் முக்கிய அங்கம் ஆகும்
திருமணத்தின் போது ஆணிற்கும் பெண்ணிற்கும் சரியான ஜாதகத்தை கொண்டு திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பது என்பது நமது அன்றாட வாழ்வில் நிகழ்வாகும் அந்த நிகழ்வை சரிவர செய்து நமது ஜோதிடர்களின் உதவியோடு துல்லியமாக கணித்து மணமுடிப்பது அனைவருக்கும் நன்றாகும்